குரங்கு அம்மைக்கும் மஞ்சள், வேப்பிலை பயன்படுத்தலாம்.

இந்தியாவில் குரங்கு அம்மை பரவுதல் மற்றும் பெண்களின் உடல் சார்ந்த பல்வேறு பிரச்சினைகள் குறித்து சித்த மருத்துவர் யோகா வித்யா நம்மிடம் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:- உலகளவில் 18 ஆயிரம் பேருக்கு குரங்கு அம்மை தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கேரளா, டெல்லி ஆகிய மாநிலங்களில் குரங்கு அம்மை பரவி வருகிறது.

ஆராய்ச்சியின்படி சின்னம்மை, பெரியம்மை போன்று குரங்கு அம்மையும் தொற்று நோய். இது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் தொற்று நோய் என்பதால், குரங்கு அம்மை தொற்று ஏற்பட்டுள்ள நபரின் பொருட்கள், எச்சில் துளிகள், வியர்வை துளிகள் நம் உடலில் கலப்பதன் மூலம் தொற்று பரவ அதிக வாய்ப்புள்ளது. அதனால், கொரோனா தொற்று போன்று குரங்கு அம்மைக்கும் கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ளும் பழக்கத்தை பின்பற்றுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதையும் படியுங்கள்: உடல் எடையைக் குறைக்க உதவும் புளி பொதுவாக, அம்மை காலத்தில் பயன்படுத்தப்படும் மஞ்சள், வேப்பிலை, போன்றவை குரங்கு அம்மைக்கும் பயன்படுத்தலாம்.

உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள கேழ்வரகு, கம்பங்கூழ், நீர் மோர் போன்றவை நிறைய குடிக்கலாம். நீர் மோர், முலாம் பழம் உள்ளிட்ட உடலுக்கு குளிர்ச்சித்தரும் உணவுப் பொருட்களை அதிகளவில் சாப்பிடலாம். உடலுக்கு அதிகப்படியான வெப்பம் கண்கள், மூளையை தாக்கக்கூடும். உடல் உஷ்ணத்தால் ஆண்களுக்கு விதைப்பையை தாக்கி விந்தணுக்கள் உற்பத்தியை பாதிக்கிறது. இதனால், குழந்தை உருவாவதில் பிரச்சினை ஏற்படுகிறது. உணவுப் பொருட்களில் கலப்படம் என்பதை தாண்டி அனைத்தும் செயற்கையாகிவிட்டது.

விதையுள்ள பழங்களை விதையுடன் சாப்பிடுவதுதான் நல்லது. அதில் ஆண்டிஆக்ஸிடன்ட் சத்து இருக்கிறது. ஆனால், அனைத்தும் ஆர்கானிக் பொருட்களா என்பதை பார்த்து வாங்குவதே பெரிய டாஸ்காக இருக்கிறது. இதையும் படியுங்கள்: ஆப்பிள் சாப்பிட சிறந்த நேரம் பெண்கள் விரைவாக பருவமடைதல், சீக்கிரமாக மாத விலக்கு முடிவடைவது தற்போது சாதாரணமாகிவிட்டது. இதற்கு, நாம் நமக்கே தெரியாமல் சாப்பிடக்கூடிய ஹார்மோன் கலந்த உணவுப் பொருட்கள். இதனால், பெண்களின் உடலில் மாற்றங்கள் ஏற்படுகிறது. குழந்தையின்மை பிரச்சினைகள் உருவாகிறது.

அந்தக் காலத்தில் குடும்ப கட்டுபாடுக்கான சுகாதார நிலையங்கள் அதிகளவில் இருந்தன. தற்போது குழந்தையின்மை மருத்துவமனைகள்தான் ஊருக்கு ஊர் அதிகரித்து வருகின்றன. இளம்பெண்களுக்கு மாத விலக்கு நேரங்களில் ஏற்படும் வலி என்பது பயப்படத்தேவையில்லை. இருப்பினும் வலி ஏற்படுவதற்கான காரணம் ரத்தசோகை. ஹூமோகுளோபின் அளவு 12 முதல் 14 வரை இருக்க வேண்டும். பெண்கள் புரோட்டீன், இரும்புச் சத்து பொருட்கள் அதிகளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.