சூப்பர் சிங்கர் முத்து சிற்பி பாடிய விருமன் படத்தின் 3வது பாடல் வெளியானது.

கார்த்திக் அதிதி நடிப்பில் உருவாகியுள்ள விருமன் படத்திலிருந்து மூன்றாவது பாடல் ஒன்று வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே கஞ்சா பூ கண்ணால, மதுரவீரன் என்று இரண்டு பாடல்கள் வெளியாகி வரவேற்பு பெற்றுள்ள நிலையில், தற்போது மூன்றாவது ஆக “வானம் கிடுக்கிடுங்க” இந்த பாடல் வெளியாகியிருக்கிறது.

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்திக் மற்றும் அதிதி ஆகியோர் நடிப்பில் உருவாகி உள்ள படம் தான் விருமன். இந்த படத்தை சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், வடிவுக்கரசி, சூரி போன்ற பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார்.

இந்தப் படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் மதுரையில் மிக பிரம்மாண்டமாக நடந்தது. இதில் அதிதியும் தந்தையும் பிரம்மாண்ட இயக்குனருமான சங்கர் மற்றும் நடிகர் சூர்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இயக்குனர் சங்கரின் மகள் அதிதிக்கு இது முதல் படமாகும். முதல் படம் வெளியாவதற்கு முன்பாகவே அடுத்தடுத்த படத்தில் கமிட் ஆகி வருகிறார் அதிதி. சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்திலும் அதிதி கமிட்டாகி உள்ளார். மேலும் விருமன் படத்தில் தேன்மொழி என்ற கதாபாத்திரத்தில் மதுரைக்கார பெண்ணாக நடித்து அசத்தியிருக்கிறார் அதிதி.

நடிப்பு மட்டுமல்லாமல் பரதநாட்டியம், பாடுவது என அனைத்திலும் கை தேர்ந்தவர் ஆக இருக்கிறார். இந்த படத்திலும் யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து மதுரை வீரன் என்ற பாடலை பாடியிருக்கிறார்.

மேலும் இவர் தாவணி சேலையில் ஆடும் கஞ்சா பூ கண்ணால பாட்டும் மதுரவீரன் பாட்டும் தற்போது அனைவராலும் பார்க்கப்படும்,பகிரட்டும் வருகிறது. விருமன் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பலர் லட்சம் பார்வையாளர்களை கடந்திருக்கிறது. அதிரடி ஆக்சன் படமாக உருவாகியுள்ள இந்த படம் மதுரை பகுதிகளில் பெரும்பாலும் படமாக்கப்பட்டிருக்கிறது.

ஏற்கனவே வெளியான இரண்டு பாடல்களும் ட்ரைலரும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், தற்போது மூன்றாவதாக ஒரு பாடல் வெளியாகியிருக்கிறது

Leave A Reply

Your email address will not be published.