சர்வதேச தமிழ் அமைப்புக்கள் மீதான தடை நீக்கம்- வர்த்தமானி வெளியானது.

சர்வதேச தமிழ் அமைப்புக்கள் சிலவற்றின் மீது விதிக்கப்பட்டிருந்த தடையை இலங்கை அரசாங்கம் தளர்த்தியுள்ளது.

புலம்பெயர்ந்த தமிழ் குழுக்கள் மற்றும் தனிநபர்கள் சிலவற்றை அரசாங்கம் குறித்த பட்டியலிலிருந்து நீக்கியுள்ளது.

பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களில், ஐக்கிய இராச்சியத்தை தளமாகக் கொண்ட செல்வாக்கு மிக்க புலம்பெயர் குழுவான Global Tamil Forum (GTF) அடங்கும்.

GTF செய்தி தொடர்பாளர் சுரேன் சுரேந்திரன் பெயரும் இதனூடாக நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியத் தமிழர் மன்றம் மற்றும் கனேடியத் தமிழ்க் காங்கிரஸும் நீக்கப்பட்ட பட்டியலுக்குள் காணப்படுகிறது.

பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி மூலம் இந்தத் தடை நீக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.