விற்பனையின்றித் தேங்கியுள்ள எரிபொருள்கள்!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த வாரங்களில் பெற்றோலுக்காக நீண்ட வரிசைகள் காணப்பட்டிருந்த நிலையில், தற்போது எரிபொருள்கள் விற்பனையின்றித் தேங்கியுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது ’கியூ.ஆர்’ முறைமையில் பெற்றோல் விநியோகம் மேற்கொள்ளப்படும் நிலையில், பெற்றோலை அளவுக்கு அதிகமாகக் கொள்வனவு செய்வது தடுக்கப்பட்டுள்ளது. அதனால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோலை அனைவரும் தடையின்றிப் பெறக்கூடிய நிலைமை தோன்றியுள்ளது என்று எரிபொருள் நிரப்பு நிலையத் தரப்புகள் தெரிவித்தன.

அதேவேளைம் ,வாரத்தில் குறிப்பிட்ட அளவு எரிபொருளையே ஒருவர் கொள்வனவு செய்ய முடியும் என்பதால், நீண்ட வரிசைகளில் காத்திருக்கும் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும், ஏராளமான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோல், டீசல் என்பன விற்பனை செய்யமுடியாமல் தேங்கி இருப்பதால், புதிதாக எரிபொருளை கொண்டுவரமுடியாதிருப்பதாகவும் , இதனால் தமது வழமையான விற்பனை இலாபம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.