ஐ.ம.சவிற்குள் புதியவர்களை உள்வாங்குவதாக இருந்தால் கூட்டணித் தலைவர்களின் உடன்பாடு அவசியம்

ஐக்கிய மக்கள் சக்திக்குள் மைத்திரிபால சிறிசேன போன்ற புதியவர்களை உள்வாங்குவதாக இருந்தால் கூட்டணித் தலைவர்களின் உடன்பாடு மிக அவசியம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோகணேசன் தெரிவித்தார்.
சமகால அரசியல் தொடர்பில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பத்திரிகை ஒன்றிற்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
ஐக்கிய மக்கள் சக்தி சஜித் பிரேமதாசவிற்கு மட்டும் உடைமையானது அல்ல. கூட்டணித் தலைவர்களாகிய நாங்களும் உடைமையாளராக இருக்கின்றோம்.
யாரும் யாருடனும் பேச்சுவார்தைகளை நடத்தலாம். ஆனால் ஐக்கிய மக்கள் சக்திக்குள் புதிதாக யாரையும் உள்வாங்குவதாக இருந்தால் கூட்டணித் தலைவர்களின் உடன்பாடும் அவசியம், என்றார்.

 

ஐக்கிய மக்கள் சக்திக்குள் மைத்திரிபால சிறிசேனவை உள்வாங்குவது தொடர்பிலும், ஐக்கிய தேசியக் கட்சியினை கரு ஜெயசூரிய தலைமையேற்ற பின்பு இனைப்பது ஐ.ம.சவோடு தொடர்பிலும் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக கூறப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.