அண்ணாச்சியை வச்சி நம்மளும் சம்பாதிப்போம்.. காசுக்காக விஜய் டிவி செய்யும் வேலை.

சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனரான அண்ணாச்சி சரவணன் அருள், இயக்குனர்களான ஜேடி மற்றும் ஜெர்ரி இயக்கிய தி லெஜண்ட் திரைப்படத்தில் நடித்து, தனது முதல் படத்திலேயே கமர்ஷியல் ரீதியான வெற்றியை பெற்றுள்ள நிலையில், அவரை வைத்து விஜய் டிவி பெரிய பிளான் போட்டிருக்கிறது.

அண்ணாச்சி வைத்து விஜய் டிவி ஒரு படத்தை எடுக்க பார்க்கிறார்கள். அவருடைய பிராண்ட் நேம் மூலம் பணம் சம்பாதிக்க திட்டமிட்டு இருக்கிறது விஜய் டிவி. இதற்காக சரவணன் அண்ணாச்சிக்கு என்றே ஒரு கதையையும் உருவாக்கியிருக்கிறார்கள்.

தி லெஜண்ட் படத்தில் என்ன தவறு செய்தாரோ, அதை எல்லாம் சரிசெய்து சினிமாவில் அவரை ஜெயிக்க வைக்கப் போகிறார்கள். இதற்காக பெரிய இயக்குனரை தேர்வு செய்துகொண்டிருக்கின்றனர் விஜய் டிவி. சரவணன் அண்ணாச்சியை சினிமாவில் ஜெயிக்க வைப்பதெல்லாம் மறுபுறம்தான்.

அவரை வைத்து காசு சம்பாதிப்பதற்காக விஜய் டிவி தற்போது தீவிரமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. இதற்கு லெஜெண்ட் சரவணனும் ஒத்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. ஏனென்றால் அவர் முதல் படத்திற்கு பிறகு அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து நடிக்க விரும்புவதாகவும் விருப்பம் தெரிவித்திருக்கிறார்.

இதுவரை இரண்டு படங்களின் கதைகளை கேட்டு ஓகே சொல்லியிருக்கும் சரவணன் அண்ணாச்சி, அந்தப் படங்களில் புது புது யுக்திகளை பயன்படுத்த இருக்கிறார். கதைக்கு தகுந்த கதாபாத்திரங்களிலும், கேங்ஸ்டர் படங்களிலும் நடிக்கும் எண்ணத்தில் இருக்கும் சரவணன் அண்ணாச்சி இனிமேல் புது புது கெட்டப்பில் நடிக்க பார்க்கிறார்.

50 வயதைத் தாண்டிய நிலையில் சினிமாவில் இவ்வளவு ஆசையுடன் இளம் நடிகர்களைப் போல் தொடர்ந்து பல படங்களில் நடிக்க வேண்டும் என்ற அண்ணாச்சி சரவணன் அருளின் ஆர்வத்தை விஜய் டிவி பயன்படுத்தப் போகிறது.

Leave A Reply

Your email address will not be published.