கோட்டாவுக்கு எதிராக வடக்கிலிருந்து ஜெனிவாவுக்கு ஓர் மனு!

தமிழ் இனப்படுகொலைக்கு காரணமான முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் போருக்கு ஆதரவளித்தவர்கள் என கூறப்படுவோரை சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தின் தலைவி திருமதி லீலாதேவி ஆனந்தன் நடராஜா வவுனியா நகரசபை மண்டபத்தில் வைத்து தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வுக்கு மகஜர் ஒன்றை அனுப்ப தீர்மானித்துள்ளதாகவும் அவர் அங்கு குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள சிவில் அமைப்புகள், மதப் பிரிவுகள், அரசியல் கட்சிகள் என பலதரப்பட்ட தரப்புகள் இந்த கையெழுத்துப் பத்திரத்தில் கையெழுத்திடவுள்ளதாக திருமதி நடராஜா மேலும் தெரிவித்தார்.

இந்த மகஜர் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், ஜெனிவா மனித உரிமைகள் அமர்வு ஆரம்பமாவதற்கு முன்னர் அதை கையொப்பமிட்டு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுகள், அரசியல் கைதிகளை விடுவித்தல், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நில ஆக்கிரமிப்புகளை நிறுத்துதல் போன்ற கோரிக்கைகள் மற்றும் பிரச்சனைகளை உள்ளடக்கிய மற்றுமொரு மகஜர் ஒன்றும் அனுப்பி வைக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.