காக்கைக் கூட்டில் இட்ட குயில் முட்டை போல ஜனாதிபதியின் பஜட்டுக்கு நடக்கும் : ஹர்ஷ (Video)

நான் வெளிநாட்டு அமைச்சில் இருந்த போது பயங்கரவாத சட்டத்தை இல்லாதொழிப்பதாக ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார். இப்போது அதே ரணில் விக்ரமசிங்க அவர்கள் அதே சட்டத்தை அமுல்படுத்தியிருப்பது ஏற்க முடியாது. தமது உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் மக்களுக்கு ஆதரவாக இருப்போம் என உறுதியளித்தோம். இப்போது அதே சட்டத்தை கொண்டு வந்து உங்களை இந்த பதவிக்கு கொண்டு வந்தவர்களை தாக்குகிறீர்கள். துரத்தி துரத்தி தாக்குகிறீர்கள் என பேச ஆரம்பித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா , இன்று இடம்பெற்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தில் , வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் ஏற்படும் எனத் தெரிவித்தார்.

இந்த வரவு செலவுத் திட்டத்தில் சில பிரேரணைகளை அமுல்படுத்த மொட்டு கட்சியினர் இடமளிக்க மாட்டார்கள் எனவும் அதனால் காக்கைக் கூட்டில் இட்ட குயில் முட்டைக்கு என்ன நடக்குமோ அதுவே ஜனாதிபதியின் வரவு செலவு திட்டத்திற்கும் நடக்கும் எனவும் ஹர்ஷ டி சில்வா தெரவித்தார்.

எனவே பாராளுமன்றத்தை உடனடியாக கலைத்து இந்த திரிபுபடுத்தலை இல்லாதொழிக்குமாறும் ஜனாதிபதியிடம் ஹர்ஷ டி சில்வா வேண்டுதல் ஒன்றை விடுத்தார்.

Leave A Reply

Your email address will not be published.