நடிகை ஜாக்குலினின் இலங்கை பங்களா குறித்த தகவல் இந்திய நீதிமன்றத்தில் வெளியானது!

இந்தியாவில் பிரபல குற்றவாளியாக இருந்த சுகேஷ் சந்திரசேகர், ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு இலங்கையில் நவீன பங்களா ஒன்றை வாங்கி கொடுத்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்திய ஊடகங்களின்படி, மும்பையின் உயர் மதிப்புள்ள ஜூஹு பகுதியில் உள்ள பங்களாவிற்கான முன்பணம் அவருக்காக வழங்கப்பட்டுள்ளது என்றும், பஹ்ரைனில் வசிக்கும் ஜாக்குலினின் பெற்றோருக்கு சுகேஷ் ஏற்கனவே ஒரு வீட்டை பரிசாக அளித்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.

இந்த சொத்துக்களை சுகேஷ் உண்மையில் வாங்கியுள்ளாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வரும் அமலாக்க இயக்குனரகம் ஆய்வு செய்து வருகிறது.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஜாக்குலினிடம் விசாரித்தபோது, சுகேஷ் தனக்காக இலங்கையின் வெலிகம பகுதியில் ஒரு பங்களாவை வாங்கியதாகவும், ஆனால் அவர் அந்தச் பங்களாவுக்கு சென்றதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இலங்கையின் பிரபலமான சுற்றுலாத் தலமான வெலிகம கடற்கரையானது சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடமாகும். இந்த சொத்து உண்மையில் சுகேஷ் வாங்கியதா அல்லது அவர் அவளிடம் பொய் சொன்னாரா என்பதை நிதிப் புலனாய்வு முகமை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

எனினும், சுகேஷ் தனது குற்ற வாழ்க்கையில் சம்பாதித்த பணத்தை ஜாக்குலின் பெர்னாண்டஸ் அல்லது அவரது உறவினர்களது பெயரில் பயன்படுத்தியாரா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என இந்திய ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.