கர்நாடகாவில் சாமியார் தூக்கிட்டு தற்கொலை.. பின்னணி என்ன?

கர்நாடகா மாநிலம் பெலகாவியில் லிங்காயத் மடாதிபதி பசவ சித்தலிங்கா தற்கொலை செய்து உயிரிழந்துள்ளார்.

கர்நாடாக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் பைலஹோங்கலா தாலுகா உள்ளது. இங்கு நெகிலஹலா என்ற லிங்காயத்து மடம் உள்ளது. இந்த மடத்தின் மடாதிபதியான சுமாவி பசவ சித்தலிங்கா இன்று தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து உயிரிழந்துள்ளார். இவருக்கு வயது 28.

இன்று காலை இவர் வழக்கம் போல தனது அறையில் இருந்து வெளியே வராததால் சந்தேகம் அடைந்த உதவியாளர்கள் கதவை தட்டியுள்ளனர். அவர் கதவை திறக்காததால் ஜன்னல் வழியே எட்டி பார்த்தபோது, மடாதிபதி தூக்கிட்டுக்கொண்டது தெரியவந்துள்ளது. உடனடியாக அவர்கள் காவல்துறையிடம் தகவல் அளித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இவர் அறையில் இருந்து தற்கொலை கடிதம் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் கடந்த வாரம் லிங்காயத்து மடாதிபதிகள் மீது பாலியல் குற்றச்சாட்டு புயலாக கிளம்பி பரபரப்பை கிளப்பியுள்ளது. சித்தரதுர்காவில் உள்ள லிங்காயத்து மடத்தின் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு பள்ளி மாணவிகள் இருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

இதேபோல் இரு பெண்கள் பல மடாதிபதிகள் மீது புகார்களை தெரிவிக்கும் ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் இன்று தற்கொலை செய்து உயிரிழந்த சித்தலிங்கா சாமியார் பெயரும் இருந்துள்ளது. தன்பெயரும் இந்த விவகாரத்தில் அடிபட்டதை எண்ணி அவர் மிகவும் கவலைபட்டதாக கூறப்படுகிறது. இந்த புகாரின் பின்னணியில் தான் இவர் தனது உயிரை மாய்த்துக்கொண்டார் எனக் தகவல்கள் தெரிவிக்கின்றன.

1 Comment
  1. Veluppillai Thangavelu says

    இவர்கள் சாமியார்கள் இல்லை. இவர்கள் காவியுடையில் மறைந்து வாழும் காமுகர்கள்.

Leave A Reply

Your email address will not be published.