ஐஐடி-ஹைதராபாத் மாணவர் தற்கொலை!

ஐஐடி-ஹைதராபாத்தைச் சேர்ந்த மாணவர், அவர் தங்கியிருந்த விடுதியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பி.டெக் முடித்திருக்கும் 23 வயதாகும் மாணவர் ஐஐடி-ஹைதராபாத் அருகே உள்ள சங்கரெட்டி நகரில் உள்ள விடுதியில் தங்கியிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

அவர் தற்கொலைக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. விடுதி ஊழியர்கள் பதிவு செய்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

ஆகஸ்ட் 31ஆம் தேதி, 25 வயதான எம்டெக் மாணவர் ஒருவர், இன்ஸ்டிடியூட்டில் உள்ள தனது அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.