மணிரத்னத்திடம் நடிக்க வாய்ப்பு கேட்ட ரஜினி.

மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், பிரபு, நாசர், சரத்குமார், ரகுமான், திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, ஷோபிதா, அதிதி ராவ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் பங்கேற்றனர்.

இவ்விழாவில் கலந்துக் கொண்ட நடிகர் ரஜினி, தான் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க வேண்டும் என மணிரத்னத்திடம் கேட்டதாக தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, பொன்னியின் செல்வன் படத்தில் பெரிய பழுவேட்டையராக நடிக்க வேண்டும் என மணிரத்னத்திடம் கேட்டேன், ஆனால் மணிரத்தினம் உங்களுடைய ரசிகர்களிடம் என்னால் திட்டுவாங்க இயலாது எனக் கூறி அந்த வேண்டுகோளை மறுத்துவிட்டார்.

மேலும் பிரபல பத்திரிக்கை ஒன்றில் மறைந்த அமரர் ஜெயலலிதா வாசகர்கள் கேள்விக்கு பதிலளித்து வந்தார். ஒரு வாசகர் பொன்னியின் செல்வன் படம் இப்பொழுது எடுத்தால் வந்தியத்தேவன் கதாபாத்திரத்திற்கு எந்த நடிகர் பொருத்தமாக இருப்பார் என்று கேட்டிருந்தார். அதற்கு ஜெயலலிதா அவர்கள் ஒரே வரியில் ரஜினிகாந்த் என்று எழுதியிருந்தார்கள். இது சொன்ன உடனே எனக்கு குஷியாகிடுச்சு. அதற்கு பிறகு தான் நான் பொன்னியின் செல்வன் புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன்.

இதை கேட்ட பின்னர் தான் பொன்னியின் செல்வன் படத்தில் கட்டாயம் இடம் பெற வேண்டும் என்கிற ஆசை தனக்கு உண்டானது. ஆனால் மணிரத்தினம் தனது ரசிகர்களை காரணம் காட்டி சின்ன ரோல் கூட கொடுக்க மறுத்தது தனக்கு வருத்தமாக உள்ளது என்றார்.

Leave A Reply

Your email address will not be published.