ஜேசிபி மூலம் வெள்ளத்தைக் கடக்கும் பள்ளி மாணவர்கள்

கர்நாடகத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஜேசிபி இயந்திரத்தைப் பயன்படுத்தி பள்ளி மாணவர்கள் வெள்ளத்தைக் கடக்கும் காட்சிகள் இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

தலைநகரான பெங்களூருவிலுள்ள மகாதேவபுரா, பொம்மனஹள்ளி பகுதிகளைச் சோ்ந்த யெமலூா், ரெயின்போ டிரைவ் லேஅவுட்,
சன்னிபுரூக்ஸ் லே அவுட் அதன் சுற்றுப்புறங்களில் மழைநீா் வெள்ளமாய் பெருக்கெடுத்துள்ளது.

பெங்களூருவில் தகவல் தொழில்நுட்பத் துறை உள்ளிட்டவைகளில் பணிபுரிவோரில் ஒரு சிலா் டிராக்டா்கள், படகுகளை வரவழைத்து, அவற்றின் உதவியுடன் அலுவலகத்திற்கு சென்றனா்.

அந்தவகையில், பாகல்கோட் மாவட்டத்தில் குலேடாகுட்டா பகுதியில் கனமழை காரணமாக பாலத்திற்கு மேல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

அதில், பள்ளி செல்லவேண்டிய மாணவர்கள் ஜேசிபி இயந்திரம் மூலம் பாலத்தைக் கடந்து பள்ளிக்குச் சென்றனர். இந்த இதனை அப்பகுதியில் இருந்த ஒருவர் விடியோ எடுத்துள்ளார். இந்த விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.