தமிழகத்தில் களைகட்டிய ஓணம் பண்டிகை… 7 மாவட்டங்களுக்கு விடுமுறை

கேரளாவில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் வரும் திருவோணம் நட்சத்திரத்தைக் கேரள மக்கள் ஓணம் பண்டிகையாக வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் ஓணம் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது.

கேரளா மட்டுமின்றி மலையாள மக்கள் வசிக்கும் அனைத்து பகுதிகளிலும் இந்த ஓணம் பண்டிகை கொண்டாடப்படும். தமிழ்நாட்டிலும் மலையாள மொழி பேசும் மக்கள் கணிசமாக வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு இன்று தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் ஓணம் பண்டிகை களைகட்டியுள்ள நிலையில், மாநில எல்லையில் உள்ள மாவட்டங்கள் மற்றும் கேரள மக்கள் அதிகம் வசிக்கும் மாவட்டங்களில் உள்ளவர்களும் விழாவை கொண்டாடும் வகையில் விடுமுறை விடப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், கோவை, நீலகிரியில் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர், ஈரோடு, கன்னியாகுமரி ஆகிய 7 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனிடையே, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு, பின்னர் திரும்பபெறப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.