நடிகை தமிதா அபேரத்னவுக்கு பிணை (Video)

நடிகை தமிதா அபேரத்னவை 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.

அவரை இன்று (12) கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து அவருக்கு பிணை வழங்கப்பட்டது.

நடிகை தமிதா அபேரத்ன எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் முன்னர் இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

மே 09 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்குள் நுழைந்து சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் தமிதா அபேரத்ன கடந்த 07ம் திகதி இரவு கொழும்பு வடக்கு குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் தியத உயன வளாகத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

இப்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.