போதைப்பொருளுக்கு அடிமையானோருக்கு யாழ்ப்பாணத்தில் புனர்வாழ்வு மையம்!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாவோரின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதால், புனர்வாழ்வு மையம் அமைப்பது தொடர்பில் யாழ். மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஆராயப்பட்டுள்ளது.

உயிர்கொல்லி போதைப்பொருளான ஹெரோய்னுக்கு 18 – 23 வயதுக்கும் இடைப்பட்ட பல இளைஞர்கள் அடிமையாகியுள்ளனர். இதனால் 10 பேர் வரையில் கடந்த 3 மாதங்களுக்குள் உயிரிழந்துள்ளனர். 320 பேர் வரையில் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். யாழ். போதனா மருத்துவமனையில் 134 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்துச் செல்வதால் யாழ். மாவட்டத்திலேயே புனர்வாழ்வு நிலையம் ஒன்றை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவில் இதற்கான காணிகளை வழங்க முடியும் என்று யாழ். மாவட்டச் செயலர் க.மகேசன் மேற்படி கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

விரைவில் இதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என்று தெரியவருகின்றது.

Leave A Reply

Your email address will not be published.