மாணவர் மத்தியில் போதைப் பொருள் பாவனையினை தடுப்பது தொடர்பான விசேட விழிப்புணர்வு செயலமர்வு!

வட பகுதியில் மாணவர்கள் மத்தியில் போதைவஸ்து பாவனை சடுதியான அதிகரித்துள்ளது. இது மாணவர்களிடம் பரவி இருப்பதை முற்றாக இல்லாதொழிக்கும் நோக்கில் முல்லைத்தீவு மாவட்ட செயலக சிறுவர் பிரிவினரின் ஏற்பாட்டில் மாவட்டத்திலுள்ள பாடசாலைகளில் விசேட விழிப்புணர்வு செயற்றிட்டத்தை முன்னெடுக்கவுள்ளது.

அந்த வகையில் குறித்த செயற்றிட்டத்தின் ஆரம்ப நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை(23) உடையார்கட்டு மகாவித்தியாலயம் மற்றும் வள்ளிபுனம் மகாவித்தியாலயம் ஆகிய இரு பாடசாலைகளில் சிறப்புற இடம்பெற்றது.

குறித்து செயலமர்வின் வளவாளராக முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(காணி) எஸ்.குணபாலன் அவர்கள் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்து விரிவுரை வழங்கினர்.

இதன்போது போதைப் பொருள் பாவனை, எதிர்கால பாதிப்புக்கள், உலகளாவிய ரீதியில் அடிமையானவர்களின் சான்றாதாரங்கள், போதைப்பொருள் பாவனை தொடர்பாக மாணவர்கள் அறிந்து வைத்திருக்க வேண்டிய விடயங்கள், சட்ட ரீதியான விடயங்கள் முதலிய ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

Leave A Reply

Your email address will not be published.