வங்காளதேசத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து- 24 பேர் உயிரிழப்பு.

வங்காளதேசத்தின் பஞ்சகர் மாவட்டத்தில் உள்ள போடா, பஞ்ச்பீர், மரியா மற்றும் பங்கரி பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் துர்கா பூஜை விழாவில் பங்கேற்க படகு மூலம் போதேஸ்வரி கோவிலுக்கு பயணம் மேற்கொண்டனர்.

கரடோயா ஆற்றில் சென்று கொண்டிருந்த அவர்களது படகு, அதிக பாரம் காரணமாக கவிழ்ந்ததில் 8 குழந்தைகள், 12 பெண்கள் உட்பட 24 பேர் நீரில் மூழ்கி இறந்தனர். அவுலியார் காட் பகுதியில் இந்த கோர விபத்து நடந்தது.

மேலும் 25க்கும் மேற்பட்டோரை காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. தீயணைப்புத்துறை வீரர்கள் உள்ளிட்ட மீட்பு படையினர் மூலம் அவர்களை தேடும் பணி நடைபெற்று வருவதாக பஞ்சகர் மாவட்ட துணை நிர்வாகத் தலைவர் சோலைமான் அலி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, வங்காள தேச அதிபர் அப்துல் ஹமீது மற்றும் பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.