இரட்டை வேடம் போடும் சஜித்! – சாடுகின்றார் அமரவீர.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இரட்டை வேடம் போடுகின்றார் என்று கமத்தொழில் அமைச்சர் மற்றும் வனசீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர குற்றஞ்சாட்டினார்

நாடாளுமன்றத்தில் நேற்று இரண்டாவது நாளாக நடைபெற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விசேட உரை தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் மஹிந்த அமரவீர இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஜனாதிபதியின் உரை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சபையில் பல்வேறு கருத்துக்களை முன்வைத்தார்.

பொறுப்புக்களை பொறுப்பெடுத்தல் நெருக்கடி நிலையை எதிர்கொள்ள முடியாது என்பதைத் தெரிந்து கொண்டே அன்று பொறுப்பைத் தவிர்த்த அவர், இப்போது எந்தவிதத்திலும் ஒருபோதும் அவ்வாறான பொறுப்பை இந்த அரசால் தான் எடுக்கப்போவதில்லை எனத் தெரிவித்து வருகின்றார்.

இதன் மூலம் அவரது இரட்டை வேடம் புலப்படுகின்றது. இப்போது நிபந்தனைகளை முன்வைக்கும் அவர் பொறுப்புக்களைப் பாரமெடுத்து அதன் பின்னர் அத்தகைய நிபந்தனைகளை முன்வைத்திருக்கலாம்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.