மார்ச் மாதத்திற்கு பின்னர் பாராளுமன்றத்தை கலைக்கத் தயாராகும் ரணில் !

எதிர்வரும் மார்ச் மாதத்திற்கு பின்னர் பாராளுமன்றத்தை கலைத்து நிலையான அரசாங்கம் ஒன்றை அமைக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திட்டமிட்டுள்ளதாக நம்பகமான அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையைக்  குறி வைத்து , ஒவ்வொரு அரசியல் கட்சியும் தத்தமது அரசியல் பிரசாரங்களைத் தொடங்கியுள்ளன.

ஒன்றிணைந்து நிற்போம் என்ற தொனிப்பொருளில் பொதுஜன பெரமுன பிரச்சார திட்டத்தை இப்போதே  ஆரம்பித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் முயற்சியின் கீழ் ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு உள்ளிட்ட அரசியல் திட்டம் கிராம மட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி  தனது மறுசீரமைப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்தியுள்ளது.

ஜனதா விமுக்தி பெரமுனாவை தளமாகக் கொண்ட தேசிய மக்கள் படை நாடு முழுவதும்  தீவிரமான திட்டத்தை தொடங்கியுள்ளது.

எதிர்வரும் தேர்தலில் பொதுஜன பெரமுன (மொட்டு) , ஐக்கிய மக்கள் சக்தி  மற்றும் தேசிய ஜன பலவேக ஆகியன தனித்தனியாக போட்டியிடவுள்ளதாகவும், ஐக்கிய தேசியக் கட்சி சுதந்திரக் கூட்டமைப்பாக போட்டியிடவுள்ளதாகவும் , இக் கூட்டணியில் சந்திரிகா குமாரதுங்க, குமார வெல்கம உள்ளிட்டோர் உட்பட,  மொட்டுவை விமர்சிக்கும் குழுக்கள், சுயேச்சைக் குழுக்கள், அரசியல் குழுக்கள் ஆகியன இணையவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் தேர்தலின் பின்னர் கூட்டு அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு ஜனாதிபதி ஏற்கனவே அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தெரியவருகிறது.

Leave A Reply

Your email address will not be published.