யாழில் தீபாவளிக் கொண்டாட்டத்தில் சோகம்! – கிணற்றுக்குள் விழுந்து 2 இளைஞர்கள் சாவு.

தீபாவளிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் இருவர் கிணற்றுக்குள் விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் யாழ்., வடமராட்சி, புலோலி – சிங்கநகர் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

குறித்த பகுதியில் இளைஞர்கள் சிலர் சேர்ந்து தீபாவளிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட போது, ஒருவர் தவறுதலாக கிணற்றுக்குள் விழுந்தார். அவரைக் காப்பாற்ற மற்றுமொரு இளைஞரும் கிணற்றுக்குள் குதித்தார்.

இருவரும் கிணற்றுத் தண்ணீருக்குள் தத்தளித்துக்கொண்டிருந்தனர்.

இதையடுத்து அருகில் இருந்த ஏனைய இளைஞர்களால் ஊரவர்களை உதவிக்காக அழைத்து கிணற்றில் இருந்தவர்களை மீட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற போதிலும் அவர்கள் வைத்தியசாலைக்கு வரும் முன்பே உயிரிழந்துள்ளனர் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பருத்தித்துறைப் பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.