நவம்பர் 14இல் சபையில் பட்ஜட் சமர்ப்பிப்பு.
2023ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற, நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழுக் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 14 ஆம் திகதி நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உரை இடம்பெறும். மறுநாள் முதல் பட்ஜட் மீதான விவாதம் ஆரம்பமாகும்.