மோசமான வானிலை காரணமாக தன்சானியாவின் விமானம் விழுந்து நெருங்கியது.

தன்சானியா நாட்டில் இன்று (6) Precision ஏர்லைன்ஸ் ATR 42 விமானம் விக்டோரியா ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதன்போது விமானத்தில் இருந்த 43 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விமானம் ​​Dar-es-Salaam நிலையத்தில் இருந்து புறப்பட்டு Bukoba விமான நிலையத்தில் தரையிறங்க முயன்ற போது, விக்டோரியா ஏரியில் ​​ விமானம் விழுந்து நொறுங்கியது.

விமானத்தில் 39 பயணிகள், இரண்டு விமானிகள் மற்றும் இரண்டு கபின் பணியாளர்கள் உட்பட 43 பேர் இருந்ததாக விமான பிராந்திய ஆணையர் ஆல்பர்ட் சலமிலா தெரிவித்தார்.

விமானம் சுமார் 100 மீற்றர் [328 அடி] நடுவானில் இருந்தபோது, ​​அது மழை மோசமான வானிலையையும் எதிர்கொண்டது. இந்நிலையில் “மோசமான வானிலை, மூடுபனி காரணமாக விமானம் விபத்துக்குள்ளானது என்று புகோபாவில் உள்ள கட்டுப்பாட்டறை பொலிஸ் கொமாண்டர் al jazeera க்கு தெரிவித்துள்ளார்.

தற்போது மழை பெய்து வருகிறது. புகோபா விமான நிலையம் ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய ஏரியான விக்டோரியா ஏரியின் கரையில் உள்ளது. மீட்புப் படகுகள் நிறுத்தப்பட்டன மற்றும் அவசரகால பணியாளர்கள் விமானத்தில் சிக்கிய பயணிகளை மீட்பது தொடர்ந்தது இடம்பெறுகிறது

ஏரியில் விழுந்ததால் தெய்வாதீனமாக பயணிகள் விமான பணியாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.