பாகிஸ்தான் முக்கிய நகரில் ட்ரோன் தாக்குதல், பதட்டம் அதிகரிப்பு !

பாகிஸ்தான் முக்கிய நகரான லாகூரில் இன்று காலையில் தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. இதனால் அங்கு பெரும் பதட்டம் நிலவுகிறது. இங்கு குண்டு வெடித்ததாக கூறப்பட்டாலும், ட்ரோன் ஒன்று தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் இந்தியா நடத்தியிருக்கலாம் என்றும் பேசப்படுகிறது. ஆனால் உறுதியான தகவல் ஏதும் இல்லை. 9 நகரங்களில் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிகிறது. 12 ட்ரோன்கள் தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இதில் பலர் காயமுற்றதாகவும் தெரிகிறது.
3 இடங்களில் பயங்கர சப்தத்துடன் குண்டு வெடித்தது. குண்டுவெடிப்புக்கான காரணம் என்ன, உயிர்ச்சேதம் எவ்வளவு என்ற விவரம் வெளியாகவில்லை. நேற்று இந்திய ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாத முகாம்கள் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்நிலையில் பாகிஸ்தானில் நடந்த குண்டு வெடிப்பு நாடு முழுவதும் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
லாகூரில் வால்டன் சாலையில் நடந்த குண்டு வெடிப்பின் போது வானத்தில் ஒரு டூரோன் பறந்தததாகவும், பின்னர் அது பாகிஸ்தான் பாதுகாப்பு படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
லாகூரில் உள்ள கோபால் நகர், நசிராபாத் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள வால்டன் சாலையில் பல குண்டுவெடிப்பு சப்தம் கேட்டன. மக்கள் பலர் பீதியில் வீடுகளை விட்டு வெளியே வந்தனர். நகரில் ஆங்காங்கே புகைமூட்டம் காணப்படுகிறது.