பத்திரமாக திரும்பியது இந்திய போர் விமானங்கள்! பொய் பிரச்சாரத்தை மேற்கொள்ளும் பாகிஸ்தான்.

பாகிஸ்தானில் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது தாக்குதல் நடத்திய இந்திய விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. செய்தியாளர்களிடம் நேற்று அந்நாட்டு ராணுவ செய்தி தொடர்பாளர் ஷெரீப் சவுத்ரி கூறுகையில், “அதிகாலை நடந்த தாக்குதலின்போது, பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள நீர் மின் நிலையம் சேதமடைந்துள்ளது.

இந்த தாக்குதலின் போது, இந்திய படைகளுக்கு பதிலடி தரப்பட்டது. அந்நாட்டில் இருந்து வந்த, பிரான்ஸ் நாட்டு தயாரிப்பான ரபேல் விமானங்கள் உட்பட ஐந்து விமானங்கள் நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்டன,” என, தெரிவித்தார்.

பாகிஸ்தான் பார்லிமென்டில் பேசிய அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீபும் இந்த தகவலை கூறியதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக அந்நாட்டு பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்தி குறிப்பில், ‘ஆப்பரேஷன் சிந்துார் நடவடிக்கையில் 80 இந்திய விமானங்கள் ஈடுபட்டன. இவற்றில், ஐந்து விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.

மூன்று ரபேல் ஜெட் விமானங்களும், ஒரு மிக் -29 மற்றும் ஒரு எஸ்.யு., 30 ரக விமானமும் வீழ்த்தப்பட்டன’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பரேஷன் சிந்துாரின் போது, இந்தியா தரப்பில் மட்டுமே தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், பதில் தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் பொய் பிரசாரத்தை பரப்பி வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.