தமிழ் புது வருடம் எப்படி இருக்கும்!

நாளை தமிழ் புது வருடமான “சுப கிருது”வருடம் பிறக்கிறது!

ஒவ்வொரு வருடத்திற்கு இடைக்காடர் எழுதிய வெண்பா இருக்கும் அதனடிப்படையில் நாம் புது வருடத்தின் பலனை அறியலாம்.

“சுபகிருது தன்னிலே சோழதேசம் பாழ்

அவமாமம் விலைகுறையும் சூன்சாம் சுபமாகும்

நாடெங்கும் மாரிமிகும் நல்லவிளை வுண்டாகும்

கேடெங்கு மில்லையதிற் கேள்!”

வெண்பா பொருள்:

சுபகிருது ஆண்டில் சோழநாட்டிலே சில பொருள்கள் வீணாகிப் பாழாகும். மான்களுக்கு நோய் தாக்கும். மண்பாண்டங்களின் விலை குறையும். மழை நன்கு பெய்து விளைச்சல் உண்டாகும். மழையினால் வேறு எந்த கேடும் இல்லை’ என்கிறது இந்த வெண்பா.

இதன் விரிவான பொருள் என்னவென்றால்
சுபகிருது வருடத்தில் பிறந்த மனிதன் சௌபாக்கியம், கல்வி, அளவற்ற புண்ணிய கர்மங்களினாலே நீண்ட காலம் வாழ்வான், பிள்ளைகளும் அதிகம் செல்வத்தோடு வாழ்வார்கள்!

சுபகிருது வருடத்தில் நோய்க் கிருமிகள் பரவினாலும் மனித உயிர்களுக்கு பாதிப்பில்லை.

இந்த ஆண்டு முழுவதுமே குருபகவான் தன் சொந்த வீடான மீன ராசியிலேயே சஞ்சரிக்கிறார். ஆகவே, கல்வி வளர்ச்சி, பொருளாதாரம், குழந்தைகளின் வளர்ச்சி ஆகியவை நல்ல முறையில் காணப்படும்.

சுப கிருது ஆண்டின் ராஜா சனிபகவான். மந்திரி குரு பகவான், சேனாதிபதி,அர்க்காததிபதி,மேகாதிபதி புதன் பகவான். தானியாதிபதி சுக்கிரன். ரஸாதிபதி சந்திரன் ஆவார்.

ராஜா சனியாக இருப்பதால் மழை வளம் பெருகும். உணவுப்பொருட்கள் உற்பத்தி, பணப்பயிர் உற்பத்தி அதிகரிக்கும். அரசின் புதிய சட்டங்களால் மக்களுக்கு பாதிப்பு அதிகரிக்கும். எல்லையில் அந்நியர் ஆதிக்கம் அதிகரிக்கும். தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்வார்கள்.

குரு பகவானின் பார்வையால் உலகத்தில் இருந்துவந்த துன்பங்கள் விலகி, படிப்படியாகக் கஷ்டங்கள் தீரும். கடத்தல் முதலான குற்றத் தொழில்கள் கட்டுப்படுத்தப்படும். அமைச்சராக குரு வருவதால் விவசாயத்திற்கு தேவையான காலத்தில் தேவையான அளவு மழை பொழியும். நாட்டில் பணப்புழக்கம் அதிகரிக்கும். வங்கித் தொழில் சிறப்படையும். மக்கள் சுகத்தோடும் சந்தோஷத்தோடும் இருப்பார்கள்.

மொத்தத்தில் சுபகிருது வருடம் சுபபான வருடமாக இருக்கும்.

Leave A Reply

Your email address will not be published.