அரசில் 116! எதிர்க்கட்சியில் 108! 5 பேர் மாறினால் பட்ஜெட் தோல்வி!

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (22) நடைபெறவுள்ள வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் போது ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையில் கடும் மோதல் ஏற்படும் என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்க்கட்சிகளின் அனைத்து அரசியல் கட்சிகளும் அரசாங்கத்துடன் தொடர்புடைய சுயேட்சை கட்சிகளும் தற்போதும் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கப் போவதாக பகிரங்கமாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்படி வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கப் போவதாக ஐக்கிய மக்கள் சக்தி, ஜனதா விமுக்தி பெரமுன, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்கனவே அறிவித்துள்ளதோடு, அரசாங்கத்தில் இருந்து சுயேச்சையாக உள்ள விமல் வீரவன்ச, அனுரயாப்பா, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தரப்புகளும் பட்ஜெட்டுக்கு எதிராக வாக்களிக்கப் போவதாக அறிவித்துள்ளன.

தற்போதைய நாடாளுமன்ற அமைப்பின் படி, அரசாங்கத்திற்கு 116 ஆசனங்கள் பெரும்பான்மையாக உள்ளன.

எதிர்க்கட்சிக்கு 108 எம்.பி.க்கள் இருப்பது தெரிந்ததே.

இதன்படி, ஆளும் கட்சியைச் சேர்ந்த ஐந்து பேர் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்தால், வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்படும் அபாயம் உள்ளதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.