ஜனாதிபதி ரணிலுடன் இ.தொ.கா. நாளை பேச்சு!

மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தொடர்பான விசேட கலந்துரையாடலை நாளை வியாழக்கிழமை ஜனாதிபதியுடன் மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளோம் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் எம்.பி. நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்தக் கடந்துரையாடலில் அனைத்து மலையக அரசியல் பிரதிநிதிகளும் கலந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

அதேவேளை, அக்கரப்பத்தன பெருந்தோட்ட நிறுவனத்துக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் தொழிற்சங்கப் போராட்டத்துக்கு சம்பந்தப்பட்ட கம்பனி உரிய தீர்வை வழங்கத் தவறுமானால் நுவரெலியா மாவட்டத்துக்கும் அந்தப் போராட்டம் விரிவுபடுத்தப்படும் என்றும் அவர் சபையில் தெரிவித்தார்.

ஒரு இலங்கையராக வரவு – செலவுத் திட்டத்தை வரவேற்கும் அதேவேளை, மலையகத்துக்கு அதில் எதுவுமே வழங்கப்படாததால் மலையகத் தமிழன் என்ற வகையில் கவலையடைவதாகவும் அவர் மேலும் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.