நாய் சேகராக வரப்போகும் வைகைப்புயல்! உத்தியோகபூர்வ அறிவிப்பு!

வைகைப் புயல் எனப் பெயர் பெற்ற நகைச்சுவை நடிகர் வடிவேலு நடித்துள்ள ‘நாய் சேகர் ரிட்டேர்ன்ஸ்‘ என்ற திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் டிசம்பர் 9ஆம் திகதி படம் திரைக்கு வருமென தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தத் திரைப்படத்தை சுராஜ் இயக்கியுள்ளதுடன் படத்திற்கு சந்தோஸ் நாராயணன் இசையமைத்துள்ளார். மேலும், வடிவேலுவுடன் சிவாங்கி கிருஸ்ணகுமார் நடித்துள்ளார்.

வைகைப் புயல் என மக்கள் மனதில் வாழ்ந்துகொண்டிருக்கும் வடிவேலுவின் நகைச்சுவை மற்றும் நடிப்பை நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் திரைகளில் காண்பதற்கு இரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.