ஹங்வெல்ல வர்த்தகரைக் கொன்ற நபர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் மரணம் (Video)

கடந்த டிசம்பர் 18ஆம் திகதி ஹன்வெல்ல பள்ளிவாசலுக்கு அருகில் உணவக உரிமையாளரான 48 வயதான மொஹமட் பாருஷான் (48) என்பவரை கொடூரமாக சுட்டுக் கொன்ற சம்பவத்தில் ஈடுபட்ட துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் இன்று (06) காலை ஹன்வெல்ல தித்தெனிய கிம்புல்தெனிய பிரதேசத்தில் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் கைது செய்யச் சென்ற போது துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் இறந்துவிட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேல்மாகாண தெற்கு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

துபாயில் தங்கியிருக்கும் லலித் மற்றும் சாமியா ஆகிய இரு குற்றவாளிகள் கொடுத்த ஒப்பந்தத்தின் பேரில் வாடகைக் கொலையாளி இந்தக் கொலையை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்த துப்பாக்கிச் சூடு நடத்தியவரை இலக்குக்கு அழைத்துச் சென்ற 32 வயதுடைய டெல்வல பொலிஸ் பிரிவைச் சேர்ந்த நபர் நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.