வலிகாமம் வடக்கில் 108 ஏக்கர் நாளை கையளிப்பு! – பலாலி அன்ரனிபுரத்தில் நிகழ்வு.

வடக்கில் காணிகளை விடுவிக்க வேண்டாம் என்ற மாகாநாயக்கர்களின் எதிர்ப்பையும் மீறி வலிகாமம் வடக்கில் 108 ஏக்கர் காணி நாளை வெள்ளிக்கிழமை பாதுகாப்புத் தரப்பினரால் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திடம் ஒப்படைக்கப்படுகின்றது. பலாலி அன்ரனிபுரத்தில் இதற்கான நிகழ்வுகள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன.

இராணுவத்தினரிடமிருந்து காங்கேசன்துறை மத்தியில் (ஜே/234) வெளிச்சவீட்டிலிருந்து துறைமுகம் வரையிலான பிரதேசத்தில் 40 குடும்பங்களுக்குச் சொந்தமான 26 ஏக்கர் காணியும், அதே கிராம அலுவலர் பிரிவில் இராணுவத்தின் பொறியியல் பிரிவு அமைந்துள்ள 24 ஏக்கர் காணி விடுவிக்கப்படுகின்றது. இது 45 குடும்பங்களுக்குச் சொந்தமானது.

மயிலிட்டி வடக்கு (ஜே/246) கிராம அலுவலர் பிரிவில் 17 குடும்பங்களுக்குச் சொந்தமான 16 ஏக்கர் காணியும், பலாலி வடக்கு அன்ரனிபுரத்தில், பருத்தித்துறையில் தங்கியுள்ள இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியமர்த்துவதற்காக 13 ஏக்கர் காணியும் விடுவிக்கப்படவுள்ளது.

நகுலேஸ்வரம் (ஜே/245) இல் 20 குடும்பங்களுக்குச் சொந்தமான 20 ஏக்கர் காணியும் நாளை ஒப்படைக்கப்படவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.