இராணுவ உத்தியோகத்தரின் துப்பாக்கி வெடித்து 25 வயது பெண் உயிரிழப்பு! (திருத்தம்)

பொரளை சஹஸ்ரபுர பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கி தவறுதலாக இயங்கப்பட்ட காரணத்தால் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொரளை சஹஸ்ரபுர பிரதேசத்தில் பொலிஸ் அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இடம்பெற்ற இந்த சம்பவத்தின் போது ஹல்கஹவத்த பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடைய யுவதியே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

உயிரிழந்த யுவதியின் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் பொலிஸ் ஊடகப் பிரிவு, சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

பிந்திய திருத்த இணைப்பு மற்றும் வீடியோ

வனாத்தமுல்லை, பொரளை ஹல்கஹவத்த பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில்  பாதுகாப்பு படையினர் நேற்று (13) இரவு நடத்திய போதைப்பொருள் சோதனையின் போது பெண் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான முழுமையான CCTV காணொளியை ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளனர்.

இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதுடன், இரு பகுதியினரிடையே ஏற்பட்ட முறுகலின் போது இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஒருவரின் துப்பாக்கி வெடித்துள்ளது.

பொரளை, ஹல்கஹகும்புர பிரதேச  பேஸ்லைன் மாவத்தையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் போதைப்பொருள் கடத்தல் நடைபெறுவதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இராணுவ புலனாய்வு அதிகாரிகள் நேற்று பிற்பகல் அதிரடி நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.

சம்பவ இடத்தில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கைகலப்பின் போது, ​​இராணுவ புலனாய்வு பிரிவைச் சேர்ந்த ஒருவரின் துப்பாக்கி ஒரே நேரத்தில் வெடித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஒருவர் தனது சட்டைப் பையில் இருந்து துப்பாக்கியை எடுத்து சந்தேக நபருடன் போராடும் போது துப்பாக்கி வெடித்தது அருகில் இருந்த சிசிடிவி கமெராவில் துப்பாக்கியின் செயற்பாடு பதிவாகியுள்ளது.

துப்பாக்கி வெடித்ததில் , அருகில் இருந்த ஒரு பெண் சுடப்பட்டு கீழே விழுந்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான பெண் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொரளை, ஹல்கஹகும்புர பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் பொரளை பொலிஸாரால் இராணுவ புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்தார்.

வீடியோ:

Leave A Reply

Your email address will not be published.