பேரீச்சம்பழக் கேக் செய்முறை

பேரீச்சம்பழக் கேக்!
தேவையான பொருட்கள்:
500 கிராம் பேரீச்சம்பழம்
4 முட்டை
200 கிராம் சீனி
200 கிராம் பட்டர்
100 கிராம் கோதுமை மா
150 கிராம் ரவை
1 தே.க பேக்கிங் பவுடர்
½ தே.க பேக்கிங் சோடா
1 தே.க வனிலா சுகர் / வனிலா எசன்ஸ்*
1 ½ மே.க தேயிலைத்தூள்*
½ கப் சுடுதண்ணீர்*
கயூ*

செய்முறை:
பேரீச்சம்பழத்தை கொட்டை நீக்கி, சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும். தேயிலையில் ½ கப் சுடுதண்ணீர் விட்டு சாயம் எடுக்கவும். வெட்டிய பேரீச்சம்பழத்துடன் சாயம் சேர்த்து, குறைந்தது 1 மணித்தியாளம் ஊற வைக்கவும் (பேரீச்சம்பழம் காய்ந்த பழமாக இருந்தால் 6 மணித்தியாலங்கள் ஊறவிடவும் அல்லது இரவு ஊற விட்டு மறு நாள் கேக் அடிக்கவும்)

ஒவனை 175 °C சூடேற்றவும்.

ஒரு பாத்திரத்தில் பட்டர் போட்டு கேக் அடிக்கும் கருவியால் அடிக்கவும். அடுத்ததாக பட்டருடன் சீனியைச் சேர்த்து நன்கு அடித்துக் கொண்டு ஒவ்வொரு முட்டையாகச் சேர்த்து அடிக்கவும் (விட்ட முட்டை நன்றாக அடித்துக் கலந்த பின்பே அடுத்த முட்டையை விடவும்).

ஊற வைத்த பேரீச்சம்பழக் கலவையை சேர்த்து 5 நிமிடங்கள் அடிக்கவும்.

மா, ரவை, பேக்கிங்சோடா, பேக்கிங் பவுடர் மற்றும் வனிலாபவுடரை ஒன்றாகச் சேர்த்துக் கலந்து, பட்டர் கலவைக்குல் 2 அல்லது 3 பிரிவாக சேர்த்துக் கலக்கவும்.

பேக்கிங் தட்டில் பேக்கிங் பேப்பரை வைத்து அதன் மேல் கேக் கலவையை ஊற்றி, சமப்படுத்தி கொள்ளவும் விரும்பினால் கயூ தூவவும்.

175° C யில் 30 – 40 நிமிடம்கள் கேக்கை வேக விடவும். கேக் ஆறியதும் துண்டுகளாக வெட்டி பரிமாறவும்.

பேரீச்சம்பழக் கேக் தயார்!

குறிப்பு:
பேரீச்சம்பழம் காய்ந்த பழமாக இருந்தால் மேலதிகமாக சுடுதண்ணீர் சேர்க்கவும் மற்றும் ஊற விடும் நேரத்தையும் கூட்டவும். பேரீச்சம்பழக் கலவை களித் தன்னையாக இருக்க வேண்டும்.

வனிலா எசன்ஸுக்கு பதிலாக் சாதிக்காய்த் தூள் சேர்க்கலாம்.

கயூ தவிர்த்தும் கேக் செய்யலாம்.

Leave A Reply

Your email address will not be published.