காதல் திருமணங்களில்தான் பெரும்பாலான விவாகரத்துகள் நடக்கின்றன – உச்சநீதிமன்றம் கருத்து…!

இந்தியாவில் காதல் திருமணம் செய்தவர்களே அதிக அளவில் விவாகரத்து கோருவதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

விவாகரத்து தொடர்பான வழக்கு ஒன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதனை நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சஞ்சய் கரோல் அமர்வு விசாரித்தது. விவகாரத்து கோரியவர்கள் காதல் திருமணம் செய்தது விசாரணையின் போது தெரியவந்தது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், காதல் திருணம் செய்தவர்களே அதிக அளவில் விவாகரத்து கோருவதாக கூறினர். இதனை தொடர்ந்து இரண்டு பேரையும் சமரசம் செய்து வைக்க முயற்சித்தனர்.

ஆனால், சமரசத்திற்கு கணவர் உடன்படவில்லை. இந்நிலையில், விவாகரத்து கோருபவர்கள் 6 மாதம் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்ற தீர்ப்பின் அடிப்படையில் தம்பதிகளுக்கு உடனடியாக விவாகரத்து வழங்கப்பட்டது. அப்போது, இந்தியாவில் காதல் திருமணம் செய்தவர்களே அதிக அளவில் விவாகரத்து கோருவதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.