கொழும்பில் எதிர்ப்புக்கு மத்தியில் முள்ளிவாய்க்கால் நினைவுச் சுடர்! – பொலிஸ், இராணுவம் குவிப்பு.

கொழும்பு, பொரளை மயான சுற்றுவட்டத்தில் இன்று முற்பகல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

வடக்கு, கிழக்கில் இன்று இடம்பெறும் நினைவேந்தல்களுக்கு ஒத்திசைவாக இந்த நிகழ்வு நடைபெற்றது என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

நிகழ்வில் வெள்ளை மலர்களுடன் மூவின மக்கள் பெருமளவில் கலந்துகொண்டனர்.

எனினும், இந்த நினைவேந்தல் நிகழ்வைத் தடுத்து நிறுத்த ஒரு குழுவினர் முயற்சித்தனர்.

தமிழீழ விடுதலைப்புலிகளை நினைவேந்துவதை அனுமதிக்க முடியாது என்று இந்த நிகழ்வுக்கு எதிராகப் பல்வேறு எதிர்ப்புக் கோஷங்களை எழுப்பிய அந்தக் குழுவினர் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

குறிப்பிட்ட குழுவினரின் எதிர்ப்புக்கு மத்தியிலும் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த தமிழ் உறவுகளை நினைவேந்தும் சுடர் ஏற்றப்பட்டது.

அத்துடன் சம்பவம் தொடர்பில் அறிந்து அப்பகுதியில் பொலிஸாரும் இராணுவமும் குவிக்கப்பட்டுப் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருந்தது.

Leave A Reply

Your email address will not be published.