தையிட்டியில் எதிர்ப்புக்களுக்கு மத்தியில் திஸ்ஸ ராஜ மகா விகாரை திறப்பு!

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு – தையிட்டி திஸ்ஸ ராஜ மகா விகாரை திறந்து வைக்கப்பட்டுள்ளது

இன்று அதிகாலை 5.30 மணியளவில் குறித்த விகாரை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

எனினும், குறித்த நிகழ்வுக்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள தையிட்டி திஸ்ஸ ராஜ மகா விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அந்த விகாரை அமைந்துள்ள தமிழ் மக்களின் காணிகளை உடனடியாகக் விடுவிக்கக் கோரியும் குறித்த பகுதியில் மூன்றாவது நாளாகவும் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்தநிலையில், குறித்த பகுதியில் பாதுகாப்பில் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.