காதலியைப் படுகொலை செய்து குழிதோன்றிப் புதைத்த காதலன்!

மதவாச்சிப் பகுதியில் பெண் ஒருவரைக் கொலை செய்து புதைத்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரைக் கடந்த சில தினங்களாகக் காணவில்லை என அவரின் உறவினர்களால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்தநிலையில் காணாமல்போன பெண்ணின் காதலனிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதற்கமைய குறித்த நபர் தனது காதலியான காணாமல்போன பெண்ணைப் படுகொலை செய்து தனது தோட்டத்தில் புதைத்துள்ளார் என வாக்குமூலம் வழங்கினார்.

பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.