பஹ்ரைனில் நடந்த இந்தியப் பேனா நண்பர் பேரவையின் கிளை தொடக்க விழா (படங்கள்)

இந்தியப் பேனாநண்பர் பேரவை‌யின், பஹ்ரைன் கிளை தொடக்கவிழா கடந்த 6ம் தேதி , பேரவைத் தலைவர் மா.கருண் அவர்களது தலைமையில் நடைபெற்றது.

பஹ்ரைன் பேரவைக்கிளை அமைப்பாளர் முனைவர் கா. பொன் சங்கர பாண்டியன் வரவேற்புரையாற்றியதோடு , பேரவை நண்பர் சொல் வேந்தர் சி. பாலசுப்ரமணியன் இலக்கிய நயத்துடன்  விழாவின் நோக்கம், பேரவை 29 ஆண்டுகளாக சமூக அரங்கில் உயிரோட்டத்துடன் செயல்பட்டு வரும் சிறப்புகள் என்பன குறித்து பேரவையின் சாதனைகளை நினைவு கூர்ந்து விழாவின் தொடக்கவுரையை ஆற்றினார்.

மா. ஜோதிபாசு, கருத்தாழமிக்க வாழ்த்துரையில் பேரவையின் சாதனைச் சரித்திரப் பின்னணிகளையும் எடுத்துரைத்தார்.

பேரவை உறவுகள் எம். சுவாமிநாதன், இரா.திருப்பதி, மற்றும் பஹ்ரைன் தி.மு.க மேனாள் தலைவர் சு. முத்துசாமி, பஹ்ரைன் மனமகிழ் மன்ற நிறுவனர் எஸ். ஹரிகரன், TASCA TOASTMASTERS மன்ற மேனாள் தலைவர் கண்ணன் கதிரேசன், பெலிக்ஸ் ராஜா, ஜெபின், சல்மானியா ரவி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து சிறப்பித்தனர்.

காலை அமர்வில் நடைபெற்ற திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற இளவல்களுக்கு சான்றிதழ் மற்றும் வெற்றிக் கோப்பைகளை பேரவைத் தலைவர் மா. கருண் அவர்கள் வழங்கினார்.

ஏராளமான பெற்றோர்களும், தமிழ் ஆர்வலர்களும் குடும்ப உறவுகளுடன் நிகழ்வில் கலந்து சிறப்பித்ததோடு , பஹ்ரைன் தமிழ்க் குரல், சொல்வேந்தர் செல்வி ஷினா சுல்தானா அவர்களின் சிறப்பான நெறியாள்கை விழாவுக்கு சிறப்பூட்டியது.

பேரவை நண்பர் செ. குகநாதன் நன்றியுரையாற்ற, அறுசுவை இரவு விருந்துடன் நிகழ்வு இனிதே நிறைவுற்றது.

  

Leave A Reply

Your email address will not be published.