வெள்ள பாதிப்பை பார்வையிட வந்த எம்எல்ஏவை அறைந்த பெண்…!

ஹரியானா, அசாம், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் கனமழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதனால், காரணமாக பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவர்களது வாழ்வாதாரங்களை இழந்தும் வாழ்விடங்களை இழந்தும் அவதிப்படுகின்றனர். பொதுமக்களுக்கு நிவாரண முகாம்களில் தங்குவதற்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், ஹரியானா மாநிலம் அம்பாலாவில் வெள்ள பாதிப்புகளை முதலமைச்சர் மனோகர்லால் கட்டார், ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார். அப்போது, தேசிய பேரிடர் மீட்புப்படை மற்றும் ராணுவத்தை அழைத்துள்ளதாக தெரிவித்தார். இதற்கிடையே, உள்துறை அமைச்சர் அனில் விஜ்-ஜின் இல்லத்தையும் வெள்ளம் சூழ்ந்தது. குலா பகுதியில் வெள்ளப் பாதிப்பை பார்வையிட சென்ற எம்எல்ஏ ஈஸ்வர் சிங்கை, ஏன் இங்கு வந்தீர்கள் எனக் கூறி பெண் ஒருவர் கன்னத்தில் அறைந்தார்.

உத்தரபிரதேச மாநிலம், நொய்டாவில், வெள்ளத்தில் சிக்கிய கால்நடைகளை, மீட்புப்படையினர் பத்திரமாக மீட்டனர். பஞ்சாப் மாநிலத்தின் கோட்கபுரா பகுதியில், வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் உறங்கி கொண்டிருந்த கர்ப்பிணி, 3 வயது குழந்தை உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஷாகோட் பகுதியில் உள்ள சட்லஜ் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய மக்களை ராணுவ வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.