அமைச்சுப் பதவி கிடைக்காததால் அதிருப்தியைக் காட்டிய எம்.பிக்கள்.

அமைச்சுப் பதவிகள் கிடைக்காததால் அதிருப்தி அடைந்திருக்கும் மொட்டு எம்.பிக்கள் பலர் கட்சிப் பணிகளில்
இருந்து விலகி இருக்கின்றனர்.

அதனை உறுதிப்படுத்தும் வகையில் தெற்கு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

கடந்த வாரம் பஸில் ராஜபக்சவின் உத்தரவுக்கு அமைய மொட்டுக் கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் கண்டியில் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்.

கண்டி – மஹியாவையில் அமைந்துள்ள லொஹான் ரத்வத்தையின் வீட்டில்தான் அந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கொழும்பில் இருந்து சாகர காரியவசம், நாமல் ராஜபக்ச மற்றும் ரோஹித அபேகுணவர்த்தன உள்ளிட்டவர்கள் கூட்டத்துக்காக அங்கு சென்றனர்.

ஆனால், கண்டியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மொட்டுக் கட்சி எம்.பிக்கள் அதில் கலந்துகொள்ளவில்லை. இதனால் கூட்டம் இடைநிறுத்தப்பட்டது. – என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.