மாட்டுச்சாணத்தில் காகிதம் தயாரித்து கோடியில் சம்பாதிக்கும் இந்தியர்! அமெரிக்காவுக்கு ஏற்றுமதி

இந்திய மாநிலம் ராஜஸ்தானை சேர்ந்த நபர் ஒருவர் பசுவின் சாணத்தில் காகிதம் தயாரித்து அமெரிக்கா வரை அதை ஏற்றுமதி செய்கிறார்.

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்பூரில் உள்ள சுதர்சன்புரா பகுதியைச் சேர்ந்த பீம் ராஜ் என்பவர் பல ஆண்டுகளாக அச்சகம் தொழிலை நடத்தி வருகிறார்.

இவருக்கு, கடந்த 2017 ஆம் ஆண்டு பசுவின் சாணத்தில் இருந்து காகிதம் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்துள்ளது. ஆனால், அதற்கு தகுந்த வரவேற்பு கிடைக்கவில்லை. மக்களும் அதனை கேலி செய்ய தொடங்கினர்.

ஆனால் இவர், காகிதத்தின் தரத்திற்கு முக்கிய காரணம் என்ன என்பதை கண்டறிந்து மீண்டும் பசுவின் சாணத்திலிருந்து காகிதம் தயாரித்து அதனை சந்தைப்படுத்தினார். இப்போது, அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதனைத்தொடர்ந்து இவர், பசுவின் சாணம் மூலம் டைரிகள், கேலண்டர்கள், பைகள் என 100-க்கும் மேற்பட்ட பொருள்கள் தயாரித்தார். பின்பு, காகிதம் தயாரிப்பதற்கான காப்புரிமையும் பெற்றார்.

தற்போது, இவரது ஆலையில் 20-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி, ஒரு கோடி வரை வியாபாரம் செய்கிறார்.

மேலும் இது குறித்து பீம் ராஜ் கூறுகையில், “காகிதம் தயாரிக்க ஒரு கிலோ பசுவின் சாணத்தை 10 ரூபாய்க்கு வாங்குவதாகும், பசுவை தன்னிறைவு ஆக்குவதற்கு இந்த முடிவு எடுத்துள்ளதாகவும்” கூறினார். மேலும், இவரது காகித பொருள்கள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.