புற்றுநோயாளிகளுக்கு நல்ல செய்தி – புதிய தடுப்பூசி அறிமுகம்!

புற்று நோய்க்கு சிகிச்சை அளிக்கும் நேரத்தை 75 சதவீதம் குறைக்கக்கூடிய தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இது இங்கிலாந்தில் உள்ள தேசிய சுகாதார சேவையால். தற்போது வரை புற்றுநோய்க்கு அளிக்கப்படும் அட்டாசோலிசுமாப், மருத்துவமனைகளில் சிறப்பு சிகிச்சை முறை மூலம் நோயாளிகளின் நரம்புகளில் செலுத்தப்படுகிறது.

இங்கிலாந்தில் உள்ள சுகாதார அதிகாரிகள் இது கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் எடுக்கும் என்றும் சில குறிப்பிட்ட நோயாளிகளுக்கு கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஆகும் என்றும் கூறுகின்றனர்.

ஆனால் இந்த புதிய தடுப்பூசியானது அட்டாசோலிசுமாப் என்ற நோயெதிர்ப்புத் தடுப்பு மருந்தை தோலில் செலுத்துவதை உள்ளடக்கியது என்றும் அதற்கு 7 நிமிடங்கள் மட்டுமே ஆகும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

சிகிச்சை நேரம் 75 சதவீதம் குறைக்கப்பட்டது புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மிகவும் நல்ல செய்தி என்று இங்கிலாந்து சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.