புதை குழியில் இருந்து புலிகள் என சந்தேகிக்கப்படும் 5 பேரின் உடல் கூறுகள் மீட்பு

போரினால் பாதிக்கப்பட்ட வன்னியில் கண்டுபிடிக்கப்பட்ட இலங்கையின் சமீபத்திய புதைகுழிகளின் அகழ்வாராய்ச்சி மீண்டும் தொடங்கப்பட்டு எட்டு நாட்கள் கடந்துவிட்டன, இதுவரை பதினான்கு பேரின் எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.

செப்டெம்பர் 14ஆம் திகதி அகழ்வுப் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, சடலங்கள் மீட்பதைக் கண்காணித்து வந்த சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் உள்ளூர் ஊடகவியலாளர்களிடம் , ஐந்து விடுதலைப் புலிகள் போராளிகளுடையது என சந்தேகிக்கப்படும் மனித எலும்பு கூடுகள் மீட்கப்பட்டுள்ளன என தெரிவித்தார்.

கொக்குத்தொடுவாய் புதைகுழியில் எட்டாவது நாளாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது தமிழீழ விடுதலைப் புலிகளுடையது என நம்பப்படும் மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.அவற்றில் பெண் புலி ஒருவரது நான்கு எலும்புக்கூடுகளும், ஒரு ஆண் போராளியின் எலும்புக்கூடும் மீட்கப்பட்டுள்ளன. மனித எலும்புக்கூடுகளில் ஒரு தோட்டா மற்றும் ஒருவரது கால்சட்டை ஒன்றில் E-1124 என்ற எண்ணும் எழுதப்பட்டிருந்தது.

மீட்கப்பட்ட மனித எலும்பு கூடுகள் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ செப்டெம்பர் 13ஆம் திகதி உள்ளூர் ஊடகவியலாளர்களுக்கு அறிவித்திருந்தார்.

போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்குத்தொடுவாய் பகுதியில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் வெளிப்பட்ட பாரிய புதைகுழி தோண்டும் பணி நீதிமன்ற உத்தரவின் பேரில் செப்டெம்பர் 6ஆம் திகதி காலை முதல் மீண்டும் ஆரம்பமானது.

கொக்குத்தொடுவாய் மகாவித்தியாலயத்தில் இருந்து கொக்கிளாய் நோக்கி 200 மீற்றர் தொலைவில் , நீர் வழங்கல் திணைக்கள ஊழியர்கள் நீர் குழாய் பதிக்க நிலத்தை தோண்டிக் கொண்டிருந்த வேளையில் தற்செயலாக ஜூன் 29 ஆம் திகதி மாலை மனித உடல் பாகங்கள் மற்றும் ஆடைகளின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

Leave A Reply

Your email address will not be published.