சீக்கியத் தலைவர் படுகொலை விவகாரம் தொடர்பாக புதிய தகவல்களை வெளியிட்ட அமெரிக்கத் தூதர்.

கனடியச் சீக்கியத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் (Hardeep Singh Nijjar) கொலைச்சம்பவத்தில் புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன.

நிஜ்ஜாரின் கொலையில் இந்தியாவுக்குத் தொடர்பிருக்கலாம் எனும் குற்றச்சாட்டை வேவுத் தகவல்களின் அடிப்படையிலேயே கனடியப் பிரதமர் சுமத்தியதைக் கனடாவுக்கான அமெரிக்கத் தூதர் டேவிட் கோஹென் (David Cohen) உறுதிசெய்துள்ளார்.

“Five Eyes” என்று அழைக்கப்படும் வேவுத் தகவல்கள் பகிர்வுக் கூட்டணியில் ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலந்து, பிரிட்டன், அமெரிக்கா ஆகியவை உள்ளன. அந்தக் கூட்டணி வேவுத் தகவல்களைப் பகிர்ந்ததாகக் கூறப்பட்டது.
“Five Eyes” (The Five Eyes (FVEY) is an intelligence alliance comprising Australia, Canada, New Zealand, the United Kingdom, and the United States.)

அதன் அடிப்படையில் ஆதாரங்களைக் கனடா பல வாரங்களுக்கு முன்னரே இந்தியாவுடன் பகிர்ந்துகொண்டதாகத் கனடா பிரதமர் ட்ரூடோ சொன்னார்.

உண்மையை நிலைநாட்ட ஒட்டாவாவுடன் புதுடில்லி ஒத்துழைக்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

எனினும் கனடாவிடமிருந்து வேவுத் தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்று இந்தியா கூறுகிறது.

இந்தியாவின் தேசியப் புலனாய்வுத்துறை, பஞ்சாப்பில் உள்ள நிஜ்ஜாரின் சொத்துகளைப் பறிமுதல் செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

நிஜ்ஜாரின் நெருங்கிய நண்பர் குர்பத்வந்த் சிங் பன்னூனின் (Gurpatwant Singh Pannun) சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

Leave A Reply

Your email address will not be published.