யாழில் பால் புரையேறி ஆண் குழந்தை பரிதாப மரணம்!

பால் புரையேறி மூன்று மாத ஆண் குழந்தை பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.

இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டையில் நேற்று இடம்பெற்றுள்ளது.

கிருஷ்ணகுமார் கரிஹரன் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

குழந்தையின் தாய் நேற்றுக் காலை குழந்தைக்குப் பாலூட்டியுள்ளார். இதன்போது குழந்தை அசைவற்று காணப்பட்டது.

இந்நிலையில், குழந்தையை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றவேளை, குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

பால் புரையேறியே குழந்தை இறந்தது என்று மருத்துவ அறிக்கையிடப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.