மீண்டும் சு.கவில் இணையத் தயாராகும் 16 எம்.பிக்கள்!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து விலகி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து கொண்ட 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் கட்சியில் இணைவது தொடர்பாக அந்தக் கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

ஹெக்டர் கொப்பேகடுவ மாவத்தையில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுர பிரியதர்ஷன யாப்பா, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த, அமைச்சர் நளின் பெர்னாண்டோ உள்ளிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து நாடாளுமன்றத்துக்குத் தெரிவான 16 பேர் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றுள்ளனர்.

சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களான அமைச்சர் மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர்களான லசந்த அழகியவண்ண, ஜகத் புஸ்பகுமார மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க, ஆகியோரும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் பங்கேற்றுள்ளனர்.

சுமார் இரண்டு மணித்தியாலங்கள் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் குறித்த 16 பேரும் மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைவது தொடர்பில் நீண்ட நேரம் பேசியுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.