வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் தேர்த்திருவிழா இன்று!

யாழ். வடமராட்சி, துன்னாலை வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் வருடாந்தத் தேர்த்திருவிழா இன்று (28) இடம்பெறும்.

கடந்த 14ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய மகோற்சவத்தில் இன்று அதிகாலை வசந்த மண்டபப் பூஜை இடம்பெற்று வல்லிபுரப் பெருமான் காலை 8 .45 மணியளவில் தேரில் ஆரோகணித்து வலம் வருவார்.

நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்குச் சமுத்திரத் தீர்த்தமும், மறுநாள் சனிக்கிழமை கேணித் தீர்த்தமும் இடம்பெறும்.

ஆலயத்துக்கான போக்குவரத்து ஒழுங்குகள் வழமைபோல் இடம்பெறும் எனவும், அடியார்கள் தங்க ஆபரணங்களை அணிந்து வருவதைத் தவிர்க்குமாறும் ஆலய அறங்காவலர் சபையினர் அறிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.