ஹர்த்தாலால் முடங்கியது யாழ். நகரம்!

தமிழ்க் கட்சிகளின் ஏற்பாட்டில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று முன்னெடுக்கப்படும் ஹர்த்தால் போராட்டத்துக்கு யாழ்ப்பாணம் நகரில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு ஆதரவை வழங்கியுள்ளன. இதனால் யாழ்ப்பாணம் நகரம் முடங்கியது.

தனியார் பஸ் சேவை அனைத்தும் முடங்கின. இலங்கை போக்குவரத்துச் சபை பஸ் சில இடங்களில் சேவையில் ஈடுபடுவதை அவதானிக்க முடிந்தது.

தவணைப் பரீட்சைகள் காரணமாக பாடசாலைகள் இயங்கியதையும் அவதானிக்க முடிந்தது.

அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த பொதுப்போக்குவரத்து உள்ளிட்ட சேவைகள் ஸ்தம்பிதம் அடைந்தன.

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜா, அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு பதவியிலிருந்து இராஜிநாமா செய்து நாட்டை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டதை எதிர்த்து வடக்கு – கிழக்கில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்க அழைப்பு விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.