த்ரில்லர் போட்டியாக பாகிஸ்தான் – தென்னாப்பிரிக்கா ஆட்டம்.

நடப்பு உலகக்கோப்பை தொடரின் மிகச்சிறந்த த்ரில்லர் போட்டியாக பாகிஸ்தான் – தென்னாப்பிரிக்கா ஆட்டம் அமைந்துள்ளது.

இந்த போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 46.4 ஓவர்களில் 270 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. அதிகபட்சமாக ஷகீல் 52 ரன்களும், கேப்டன் பாபர் அசாம் 50 ரன்களும் சேர்த்தனர்.

தென்னாப்பிரிக்கா அணி தரப்பில் ஷம்சி 4 விக்கெட்டுகளையும், மார்கோ யான்சன் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 47.2 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 271 ரன்கள் சேர்த்து த்ரில் வெற்றியை பெற்றுள்ளது.

உலகக்கோப்பை தொடர் தொடங்கி 23 நாட்களாகியுள்ள நிலையில், கடைசி வரை விறுவிறுப்பாக அமைந்த போட்டியாக அமைந்துள்ளது.

இறுதியாக தென்னாப்பிரிக்கா 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. இதன் மூலம் பாகிஸ்தான் அணி தொடர்ச்சியாக 4 போட்டிகளில் தோல்வியை பதிவு செய்துள்ளது.

இந்த போட்டியில் வென்றதன் மூலமாக தென்னாப்பிரிக்கா அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள தென்னாப்பிரிக்கா அணி 5 வெற்றி, ஒரு தோல்வியுடன் உள்ளது.

அதுமட்டுமல்லாமல் தென்னாப்பிரிக்கா அணி இமாலய வெற்றிகளை பெற்றிருப்பதால், அந்த அணியின் ரன்ரேட் +2.032ஆக உள்ளது. இதன் காரணமாக புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்த இந்திய அணி இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்திய அணியை பொறுத்தவரை 5 போட்டிகளில் விளையாடி 5லும் வென்று, +1.353 ரன் ரேட்டுடன் உள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றிபெற்றால் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறலாம்.

ஆட்டத்தில் தோல்வியடைந்த பாகிஸ்தான் அணி 6 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி, 4 தோல்விகள் என்று 4 புள்ளிகளுடன் 6வது இடத்தில் நீடிக்கிறது.

ஆனால் வரும் நாட்களில் ஆஃப்கானிஸ்தான் அணி வெற்றிபெறும் பட்சத்தில் புள்ளிப்பட்டியலில் பாகிஸ்தான் அணி இன்னும் கீழ் நிலைக்கு செல்ல வாய்ப்புகள் உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.