ஜோ பிடனின் உறுதி மொழி – இந்தியாவின் நட்புறவு பலப்படுத்தப்படும்.

வரும் நவ., 3ல் அமெரிக்காவில் அதிபர் தேர்தல், நடக்கவிருக்கின்றது. இத் தேர்தலில், குடியரசு கட்சி சார்பில் அதிபர் டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடனும் போட்டியிடுகின்றனர்.

ஹிந்து அமெரிக்கர் அரசியல் நடவடிக்கை குழு சார்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, ஜோ பிடனின் பிரசார குழுவினர் பதில் அளித்தனர்.

இந்தியா – அமெரிக்கா இடையேயான நட்பு, இயற்கையானது. இரு நாடுகளும், பல விஷயங்களில், ஒருமித்த கருத்துக்களை கொண்டுள்ளன. ஜோ பிடன் தலைமையில் ஆட்சி அமைந்தால், இந்தியா – அமெரிக்கா இடையேயான நட்புறவை மேலும் வலுப்படுத்த, அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

தெற்காசியாவில்  பயங்கரவாதத்தை ஒழிப்பதில், இந்தியாவுடன் அமெரிக்கா இணைந்து செயல்படும். பயங்கரவாதத்தை சிறிதும் பொறுத்துக்கொள்ள முடியாது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், ஒரு கோடிக்கும் அதிகமான அகதிகளுக்குக் குடியுரிமை வழங்குவோம். இதில், இந்தியர்கள், 5 லட்சத்துக்கும் அதிகமானோர் உள்ளனர். பல்வேறு நாடுகளிலிருந்து குடியேறுபவர்களின் நாடாக அமெரிக்கா விளங்குகின்றது.

ஜோ பிடன் அதிபரானால், வெள்ளை மாளிகையில், தீபாவளி, ஹோலி, விநாயகர் சதுர்த்தி உட்பட, பல ஹிந்து பண்டிகைகள் கொண்டாடப்படும். இவ்வாறு, ஜோ பிடன் பிரசார குழுவினர் பதில் அளித்தனர். ‘

Leave A Reply

Your email address will not be published.